November 8, 2026
இலங்கை

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வானம் முகில் செறிந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி, மாத்தறை, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களின் வானிலை

நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையிலிருந்தோ அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்தோ மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

நீர்கொழும்பு முதல் புத்தளம், காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அடிக்கடி மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றருக்கும் அதிகரிக்கக்கூடும். இதனால் குறித்த கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதன்போது கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

Related posts

மருந்து உற்பத்தி விரிவாக்கம்

Lankasudar

பிரகீத் வழக்கு ஒத்திவைப்பு

Lankasudar

மன்னார் வைத்தியசாலையில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல்

Lankasudar

முன்னாள் அதிகாரி கைது

Lankasudar

GIT திருத்தங்களுக்கு அவகாசம் நீடிப்பு

Lankasudar

அப்புத்தளையில் பெண் சடலமாக மீட்பு

Lankasudar

Leave a Comment