November 3, 2026
இலங்கை

அப்புத்தளையில் பெண் சடலமாக மீட்பு

அப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரகல பகுதியில் உள்ள வீடொன்றில் 78 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பெரகல பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் தனது மகனுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவத்துக்கு முதல் நாள், அவரது மருமகளும் இரண்டு சிறுவர்களும் தமது தந்தையின் வீட்டிற்குச் சென்றிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்கள் மறுநாள் காலை வீடு திரும்பியபோது மேற்கொண்ட சோதனையில், குறித்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அப்புத்தளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மின்தடைக்கான காரணம் தெரியவில்லை

Lankasudar

பொதுமன்னிப்பு கோரிக்கை

Lankasudar

காணி விடுவிப்பில் ஏமாற்றம்

Lankasudar

காணாமல்போனோர் குடும்பங்களுக்கு எச்சரிக்கை

Lankasudar

எரிவாயு விநியோகம் மந்தம்

Lankasudar

ஹஷிஷ் போதைப்பொருளுடன் மூவர் கைது

Lankasudar

Leave a Comment