November 6, 2026
இலங்கை

4,000 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நிலுவை

பொலிஸ் விசாரணைகள், மருத்துவத் தடயவியல் பரிசோதனைகள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான நீதித்துறை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களுக்கு மத்தியில், இலங்கை முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 4,000 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அதிகாரசபையின் சட்ட அமுலாக்கப் பிரிவுப் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான சஜீவனி அபேகோன், அதிகாரசபைக்கு ஆண்டுதோறும் 10,000 முதல் 12,000 வரையான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில் குற்றவியல் நடத்தைகள் தொடர்பான முறைப்பாடுகள் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரசபைக்குக் கிடைக்கும் முறைப்பாடுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், நீண்டகாலமாக நிலவும் பணியாளர் பற்றாக்குறை மற்றும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டிய உளச்சமூக ஆதரவு, கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாகச் சில வழக்குகள் தரவுத்தளத்தில் நிர்வாக ரீதியாக முடிவுறுத்தப்படாமல் திறந்த நிலையில் உள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

எவ்வாறாயினும், இதன் பொருள் அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதல்ல எனக் குறிப்பிட்ட அவர், பெறப்பட்ட ஒவ்வொரு முறைப்பாட்டின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பணியாளர் பற்றாக்குறை காரணமாகவே சில வழக்குகள் உத்தியோகபூர்வமாக முடிக்கப்படாமல் தரவுத்தளத்தில் நிலுவையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், நிலுவையிலுள்ள முறைப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதில் அதிகாரசபை கணிசமான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் கிடைத்த முறைப்பாடுகளில் சுமார் 75 சதவீதமும், 2026ஆம் ஆண்டில் இதுவரை கிடைத்த முறைப்பாடுகளில் 50 சதவீதமும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியான உளச்சமூக உதவி அல்லது கண்காணிப்பு தேவைப்படும் முறைப்பாடுகள் தொடர்ந்து திறந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, சந்தேகத்திற்குரிய குற்றவியல் சம்பவங்கள் தொடர்பான விடயங்கள் உரிய சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சஜீவனி அபேகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசிரியர் ஆட்சேர்ப்பில் குறைபாடு

Lankasudar

இன்றைய வானிலை

Lankasudar

பிரகீத் வழக்கு ஒத்திவைப்பு

Lankasudar

நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒத்திவைப்பு

Lankasudar

மடு வீதி விபத்து: பெண் உயிரிழப்பு

Lankasudar

கண்டியில் மெட்ரோ பஸ் சோதனை

Lankasudar

Leave a Comment