November 3, 2026
இலங்கை

மடு வீதி விபத்து: பெண் உயிரிழப்பு

மன்னார் மடு பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் 55 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

நீர்கொழும்புப் பகுதியில் இருந்து நான்கு பேர் காரில் மடுத் தேவாலயத்திற்குப் பயணித்துள்ளனர்.

மதவாச்சி வீதியூடாக மடு சந்தியை வந்தடைந்து, அங்கிருந்து மடு பிரதான வீதியூடாகச் சென்றுகொண்டிருந்தபோது, மடுத் தேவாலயத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாமுக்கு முன்னால் கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த நால்வரும் பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதன்போது, பெண் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த ஏனைய மூவரும் மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவு வண்டி மூலம் பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையிலிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த 55 வயதுடைய பெண்ணின் சடலம் பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மடுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Related posts

டெங்கு தடுப்பூசி தாமதம்

Lankasudar

சிகை நிலையங்களுக்கு கட்டுப்பாடு

Lankasudar

ஷிராந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்

Lankasudar

ஐஸ் வியாபாரம்: ஒருவர் கைது

Lankasudar

தனியார் பஸ் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

Lankasudar

அஸ்வெசும மோசடி விசாரணை

Lankasudar

Leave a Comment