களுத்துறை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இருவர் சுட்டுக் கொ**ல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற இந்த இரட்டைக் கொ**லைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு களுத்துறை மற்றும் அகலவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், இரட்டைக் கொ**லைக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருள், திருடப்பட்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
