November 3, 2026
இலங்கை

சீரற்ற காலநிலை பாதிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக 166 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 1,594 குடும்பங்களின் 5,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நான்கு வீடுகள் முழுமையாகவும் 953 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, இன்று வெள்ளிக்கிழமை (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வரை வீசக்கூடும். எனினும், மழை பெய்யும் நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடல் பிராந்தியங்களில் நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு மீனவர்களும் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

கொழும்பில் வயோதிபர்களுக்கான முதலாவது பகல்நேர செயற்பாட்டு மையம் ஆரம்பம்

Lankasudar

கலஹாவில் புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு

Lankasudar

எரிவாயுக் கப்பல் இன்று வருகை

Lankasudar

ஐஸ் வியாபாரம்: ஒருவர் கைது

Lankasudar

லண்டன் – யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை: பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் மனு

Lankasudar

பலத்த மின்னல் எச்சரிக்கை

Lankasudar

Leave a Comment