இலங்கை முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில், மின் விநியோகத்தைச் சீரமைப்பதற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு மேல் செல்லக்கூடும் என இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மின்தடைக்கான சரியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
