November 3, 2026
இலங்கை

ஜனாதிபதி செயலகத்தில் தேரர்கள் பேரணி

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரரைப் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும், தேரர்களின் மத உரிமைகளை வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்ட நடைபேரணி இன்று ஜனாதிபதி செயலக வளாகத்தைச் சென்றடைந்துள்ளது.

இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான தேரர்கள் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஜனாதிபதி செயலகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளுக்காக அதிகளவிலான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள வாரியபொல சுமங்கல தேரரின் உருவச்சிலைக்கு முன்பாக கடந்த 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபேரணி, இன்று கொழும்பில் நிறைவடைகிறது.

Related posts

சீரற்ற காலநிலை பாதிப்பு

Lankasudar

தெதுரு ஓயா வான்கதவுகள் திறப்பு 

Lankasudar

மாடு கடத்தல் முயற்சி

Lankasudar

வீதி விபத்துகளில் இருவர் பலி

Lankasudar

30,000 ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு திட்டம்

Lankasudar

அஸ்வெசும மோசடி விசாரணை

Lankasudar

Leave a Comment