November 3, 2026
இலங்கை

30,000 ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு திட்டம்

எதிர்வரும் ஆண்டில் 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாட்டில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

நடப்பு ஆண்டில் தரம் 1க்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அனைத்துப் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் புதிய கல்வி முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பரீட்சைகளுக்கு மாத்திரம் முகங்கொடுக்கும் பிள்ளைகளை உருவாக்குவதற்குப் பதிலாக, எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளுடன் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய தலைமுறையொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

இதேவேளை, 17,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகக் கட்டமைப்பில் 2,000 விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதமளவில் ஒட்டுமொத்தக் கல்விக் கட்டமைப்புக்கும் புதிதாக சுமார் 30,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக விசேட திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் குறிப்பிட்டார்.

Related posts

புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு: தரமற்ற 801 பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்

Lankasudar

கண்டியில் மெட்ரோ பஸ் சோதனை

Lankasudar

சீரற்ற காலநிலை பாதிப்பு

Lankasudar

புத்தளத்தில் பீடி இலைகள் பறிமுதல்

Lankasudar

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 20 ஆண்டு கால EPF/ETF நிலுவைத்தொகை: ரூ. 4,500 மில்லியனை வழங்க நடவடிக்கை

Lankasudar

அக்குறணையில் மீண்டும் வெள்ளம்

Lankasudar

Leave a Comment