நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதில் இரண்டு வான்கதவுகள் தலா இரண்டு அடி வீதமும், ஏனைய இரண்டு வான்கதவுகள் தலா ஓர் அடி வீதமும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் விநாடிக்கு 4,000 கன அடி நீர் தெதுரு ஓயா ஆற்றுக்கு வெளியேற்றப்படுகின்றது.
இதனால், ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
