November 3, 2026
இலங்கை

அலியேவுடன் விஜித்த ஹேரத் சந்திப்பு

அசர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்று வரும் ஆசியாவில் உரையாடல் மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான மாநாட்டின் (CICA) 7ஆவது மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிப் பங்கேற்றுள்ள வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் எரிசக்தித் துறைகளில், குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இன்று (14) வியாழக்கிழமை முதல் 15ஆம் திகதி வரை நடைபெறும் CICA மாநாட்டில், “வலுவான CICA: ஆசியாவில் இணைப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நிலையான வளர்ச்சி” (Stronger CICA: Connectivity, Digitalisation and Sustainable Growth in Asia) என்ற கருப்பொருளின் கீழ் அமைச்சர் விஜித்த ஹேரத் இலங்கையின் தேசிய அறிக்கையை வெளியிடவுள்ளார்.

அசர்பைஜான் அதிகாரிகளுடன் மட்டுமன்றி, கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட CICA உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் CICA பொதுச் செயலாளர் ஆகியோரையும் அமைச்சர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

மேற்காசியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் புதிய பொருளாதாரக் கூட்டாண்மைகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு இந்தப் பயணம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

எரிவாயு விநியோகம் மந்தம்

Lankasudar

மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு

Lankasudar

ஞானசாரர் போராட்டம்: மூவருக்கு பிணை

Lankasudar

பசிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Lankasudar

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: மூவர் கைது

Lankasudar

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுங்கள்: சவுதியிடம் தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை

Lankasudar

Leave a Comment