November 2, 2026
இலங்கை

ஞானசாரர் விவகாரம்: ஜனாதிபதி முடிவு

பௌத்த மதத்துக்கும் ஏனைய மதங்களுக்கும் உயரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பதவிக்கு வந்த நாள் முதல் இந்த நிலைப்பாடு பின்பற்றப்படுவதாகவும், அதனைச் செயற்பாடுகள் ஊடாகவும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரர் விவகாரம் நீதிமன்றத்துடன் தொடர்புடையது எனத் தெரிவித்த பிரதமர், இந்த விடயத்தில் ஜனாதிபதி அரசியலமைப்புக்கு உட்பட்டு சிறந்த தீர்மானத்தை எடுப்பார் என்றும் கூறினார்.

புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை இன்று வெள்ளிக்கிழமை (16) சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2027ஆம் ஆண்டு முதல் புதிய கல்வி மறுசீரமைப்பு அமுல்படுத்தப்படும் எனவும், அதற்கான பணிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். அத்துடன், புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

யாழில் ரூ.85 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்

Lankasudar

ஏரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! ரி-56 துப்பாக்கியுடன் 84 தோட்டாக்கள் மீட்பு

Lankasudar

ஊவா பரணகமவில் தாய் மாயம்

Lankasudar

அஸ்வெசும மோசடி விசாரணை

Lankasudar

மன்னாரில் சட்ட நடவடிக்கை

Lankasudar

மோட்டார் சைக்கிள் டயரில் சிக்கிய ஆடை: பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

Lankasudar

Leave a Comment