November 8, 2026
இலங்கை

மன்னார் வைத்தியசாலையில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் சுமார் 1,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான கட்டட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, ஜனாதிபதியின் தலைமையில் 600 மில்லியன் ரூபாய் செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான நிர்மாணப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குழந்தை நலப் பிரிவுக்கான நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதி மற்றும் வைத்தியர்களுக்கான விடுதித் தொகுதி ஆகியவற்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (15) காலை 10 மணியளவில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதி அமைச்சர்களான அன்ரன் ஜெயக்கொடி, உபாலி சமரசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன் ஆகியோர் இணைந்து அடிக்கல் நாட்டி வைத்தனர்.

இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கான சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் இக்கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

இலங்கை மற்றொரு பிரஜையை இழந்துவிடக் கூடாது: சவூதி மரண தண்டனை விவகாரத்தில் பைஸர் முஸ்தபா அவசர அழைப்பு

Lankasudar

அலியேவுடன் விஜித்த ஹேரத் சந்திப்பு

Lankasudar

தனிப்பயன் இலக்கத் தகடுகள்

Lankasudar

காணி விடுவிப்பில் ஏமாற்றம்

Lankasudar

தனியார் பஸ் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

Lankasudar

எரிவாயுக் கப்பல் இன்று வருகை

Lankasudar

Leave a Comment