November 3, 2026
இலங்கை

எரிவாயுக் கப்பல் இன்று வருகை

3,900 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (18) இலங்கையை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கப்பல் நாட்டை வந்தடைந்ததும், எரிவாயுவை இறக்கும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கப்பலின் வருகையைத் தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களில் மேலும் 350,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தடையற்ற எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை உறுதிப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த மூன்று நாட்களில், இன்றைய தினத்தையும் உள்ளடக்கி, 350,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நுகர்வோர் தேவையற்ற வகையில் எரிவாயு சிலிண்டர்களைச் சேமித்து வைப்பதையோ பதுக்கி வைப்பதையோ தவிர்க்குமாறும் லிட்ரோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி செயலகத்தில் தேரர்கள் பேரணி

Lankasudar

ஏரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! ரி-56 துப்பாக்கியுடன் 84 தோட்டாக்கள் மீட்பு

Lankasudar

உத்தியோகத்தரைத் தாக்கியவர் கைது

Lankasudar

ஊவா பரணகமவில் தாய் மாயம்

Lankasudar

பலத்த மின்னல் எச்சரிக்கை

Lankasudar

கடிகமுவவில் மண்சரிவு

Lankasudar

Leave a Comment