November 8, 2026
இலங்கை

முன்னாள் அதிகாரி கைது

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவராகக் கருதப்படும் ‘லொக்கு பெட்டி’யின் பிரதான துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் ‘அல்மேதா’வின் கொ**லைச் சம்பவம் தொடர்பில், காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் காலி, வக்வெல்ல பகுதியில் உள்ள கிங் கங்கைப் பாலத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த சடலத்தின் கைகளும் கால்களும் கட்டப்பட்டு, கொங்கிறீட் தூண் ஒன்றுடன் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது. அத்துடன், சடலத்தின் முகமும் கடுமையாகச் சிதைக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்த விசாரணைகளில், மீட்கப்பட்ட சடலம் ‘லொக்கு பெட்டி’யின் பிரதான துப்பாக்கிதாரி எனக் கூறப்படும் ‘அல்மேதா’வினுடையது என்பது தெரியவந்தது.

கொ**லைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்தக் கொ**லையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இன்புளுவென்சா பரவல் அதிகரிப்பு

Lankasudar

இன்றைய வானிலை

Lankasudar

ஞானசாரர் போராட்டம்: மூவருக்கு பிணை

Lankasudar

ஞானசார தேரர் விவகாரம்

Lankasudar

யாழ். பழைய பூங்கா விளையாட்டரங்கு விவகாரம்: மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஆளுங்கட்சிக்குள் மோதல்

Lankasudar

காணி வழங்குவதாகக் கூறி நிதி மோசடி: ஹட்டன் – டிக்கோயா நகர சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை

Lankasudar

Leave a Comment