November 6, 2026
இலங்கை

கட்டுநாயக்கவில் இருவர் கைது

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போது, சட்டவிரோதமாக மதுபானம் தயாரிப்பதற்காக வைத்திருந்த பெருமளவிலான ‘கோடா’வுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) ஹீனட்டியன ரம்ய தொட்டுபொல மற்றும் மோலகந்த ரம்ய தொட்டுபொல ஆகிய பகுதிகளில் இரண்டு திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 932 லீற்றர் ‘கோடா’ (5 பீப்பாய்கள்) மற்றும் 67.5 லீற்றர் ‘கோடா’ (90 போத்தல்கள்) ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 30 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

அப்புத்தளையில் பெண் சடலமாக மீட்பு

Lankasudar

மோட்டார் சைக்கிள் டயரில் சிக்கிய ஆடை: பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

Lankasudar

மடு வீதி விபத்து: பெண் உயிரிழப்பு

Lankasudar

மருந்து உற்பத்தி விரிவாக்கம்

Lankasudar

ஷிராந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்

Lankasudar

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி சட்டத்தை மீறிய சுமார் இரண்டாயிரம் பேருக்கு அபராதம்

Lankasudar

Leave a Comment