November 3, 2026
இலங்கை

வெலிகமவில் போதைப்பொருள் மீட்பு

இலங்கையின் தெற்கே தேவேந்திரமுனைப் பகுதிக்கு அப்பால் ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான பலநாள் மீன்பிடிப் படகொன்றுடன் ஐந்து சந்தேகநபர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படைக்குக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், நேற்று புதன்கிழமை (14) ஆழ்கடலில் இந்த விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, குறித்த மீன்பிடிப் படகும் அதிலிருந்த ஐந்து சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இலங்கை கடற்படை, அரச புலனாய்வுச் சேவை, இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் இலங்கை கடலோரக் காவல்படை ஆகியன இணைந்து கூட்டுச் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தன.

இதன் விளைவாக, இன்று வியாழக்கிழமை (15) காலை வெலிகம, கப்பரத்தோட்டா கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் அடங்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் ஆறு பொதிகள், இரண்டு செய்மதித் தொலைபேசிகள் மற்றும் இணைய இணைப்பு சாதனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நாட்டிலிருந்து போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக, மீனவ சமூகத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் வழங்கிவரும் ஒத்துழைப்புடன், ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய நடவடிக்கையின் கீழ், இலங்கையைச் சூழவுள்ள கடற்கரைப் பகுதிகளிலும் கடற்பரப்புகளிலும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ஷிராந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்

Lankasudar

ஞானசார தேரருக்கு ஆதரவு

Lankasudar

GIT திருத்தங்களுக்கு அவகாசம் நீடிப்பு

Lankasudar

இலங்கை மற்றொரு பிரஜையை இழந்துவிடக் கூடாது: சவூதி மரண தண்டனை விவகாரத்தில் பைஸர் முஸ்தபா அவசர அழைப்பு

Lankasudar

அஸ்வெசும மோசடி விசாரணை

Lankasudar

கடிகமுவவில் மண்சரிவு

Lankasudar

Leave a Comment