18.1 C
London
October 1, 2026
இலங்கைமலையகம்

கலஹாவில் புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு

கலஹா நில்லம்ப பகுதியில் புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

கலஹா, நில்லம்ப, குருகலே பகுதியில் புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுமி, சமையலறையில் இருந்த புளியை எடுத்து விளையாடியபோது எதிர்பாராதவிதமாக அதன் கொட்டை தொண்டையில் சிக்கியுள்ளது.

சம்பவத்தை கவனித்த சிறுமியின் தாயாரும் உறவினர்களும் அவரை உடனடியாக பேராதனை போதனா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். எனினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது பேராதனை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கலஹா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொழும்பில் புதிதாக 122 மெட்ரோ பஸ்கள்: யாழ்ப்பாணம், கண்டி, காலி நகரங்களுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை

Lankasudar

இலங்கையில் நாள்தோறும் 17 மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம்: மூவர் உயிரிழப்பதாக விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை

Lankasudar

லண்டன் – யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை: பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் மனு

Lankasudar

புறக்கோட்டையில் திடீர் சுற்றிவளைப்பு: தரமற்ற 801 பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல்

Lankasudar

மதுபானக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை: பொலிஸ் சார்ஜன்ட் உள்ளிட்ட இருவர் ஒரு மணித்தியாலத்துக்குள் கைது

Lankasudar

ஏரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! ரி-56 துப்பாக்கியுடன் 84 தோட்டாக்கள் மீட்பு

Lankasudar

Leave a Comment