November 8, 2026
இலங்கை

இலங்கை–சீனா ஒத்துழைப்பு

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இலங்கை மற்றும் சீன அதிகாரிகளுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்னவுக்கும், இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங்குக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு, நேற்று (14) கொழும்பில் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான தேசிய மையமொன்றை இலங்கையில் அமைக்க சீனாவின் உதவியைப் பெறுவது குறித்தும் பேசப்பட்டது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் செயற்கை நுண்ணறிவுத் துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், இலங்கையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதும் தனது முக்கிய நோக்கங்களில் அடங்குவதாகக் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் மேற்கொண்ட சீன விஜயங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

டிஜிட்டல் ஒத்துழைப்பு தொடர்பான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால தெரிவித்தார்.

நிதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் GovTech தலைமைத்துவத்தின் ஆலோசனைகளுக்கு அமைவாக இந்த வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

ஐஸ் வியாபாரம்: ஒருவர் கைது

Lankasudar

நாமல் நீதிமன்றில்

Lankasudar

ஞானசாரர் விவகாரம்: ஜனாதிபதி முடிவு

Lankasudar

தனிப்பயன் இலக்கத் தகடுகள்

Lankasudar

கொழும்பில் புதிதாக 122 மெட்ரோ பஸ்கள்: யாழ்ப்பாணம், கண்டி, காலி நகரங்களுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை

Lankasudar

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: மூவர் கைது

Lankasudar

Leave a Comment