November 8, 2026
இலங்கை

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல் மாகாணத்தின் கரையோரப் பிராந்தியங்களிலும், காலி, புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடல் உணரக்கூடியதாக இருக்கும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்

நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 25–35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

சிலாபம் முதல் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45–50 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் அடிக்கடி காற்று வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில், குறித்த கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 60–70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதன்போது, கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

Related posts

லண்டன் – யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை: பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் மனு

Lankasudar

ஆசிரியர் ஆட்சேர்ப்பில் குறைபாடு

Lankasudar

வவுனியாவில் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு

Lankasudar

ஞானசாரர் போராட்டம்: மூவருக்கு பிணை

Lankasudar

மோட்டார் சைக்கிள் டயரில் சிக்கிய ஆடை: பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

Lankasudar

நிலத்தடி நீர் பிரிவுக்கு அடிக்கல்

Lankasudar

Leave a Comment