November 3, 2026
இலங்கைவடக்கு

நிலத்தடி நீர் பிரிவுக்கு அடிக்கல்

வடக்கு மாகாணத்தின் நிலத்தடி நீர் வளங்களை முறையாக முகாமைத்துவம் செய்வதற்காக, 190 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (16) யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் நடைபெற்றது.

இலங்கை நீர்வளச் சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வு, சமய வழிபாடுகளுடன் ஆரம்பமானது. இதன்போது, கட்டட நிர்மாணப் பணிகள் சிறப்பாக நிறைவேற வேண்டி பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து, குறித்த கட்டடத்திற்கான திட்ட முன்மொழிவைப் பிரதிபலிக்கும் பெயர்ப்பலகையை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ. சந்திரசேகர், பிரதியமைச்சர், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், இலங்கை நீர்வளச் சபையின் அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாணத்தின் நிலத்தடி நீர் வளங்களைச் சீராக முகாமைத்துவம் செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில், இந்தப் பிரிவு 190 மில்லியன் ரூபா செலவில் நிறுவப்படவுள்ளது.

Related posts

கவன்திஸ்ஸ யானை உயிரிழப்பு

Lankasudar

புதைகுழி அகழ்வு

Lankasudar

வெலிகமவில் போதைப்பொருள் மீட்பு

Lankasudar

ஐ.நா. பொதுச் சபையில் இன்று தேசிய உரையை நிகழ்த்தவுள்ளார் விஜித்த ஹேரத்

Lankasudar

முன்னாள் அதிகாரி கைது

Lankasudar

யாழ். மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்தபோது திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு

Lankasudar

Leave a Comment