November 7, 2026
இலங்கை

அக்குறணையில் மீண்டும் வெள்ளம்

அக்குறணை நகரில் மீண்டும் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, கண்டி – மாத்தளை பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை (17) போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நேற்று மாலை பெய்த கடும் மழையால், அக்குறணை நகரின் ஊடாகப் பாயும் பிங்கா ஓயா மற்றும் துனுவில வீதியூடாகப் பாயும் வஹுகல ஓயா உள்ளிட்ட கிளை நதிகள் பெருக்கெடுத்தன.

இதனால் கண்டி – மாத்தளை பிரதான வீதி மற்றும் துனுவில வீதி ஆகியன முற்றாக வெள்ளத்தில் மூழ்கின. சுமார் 4 முதல் 5 அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்ததால் நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டன.

சுமார் ஒரு மணிநேரத்தில் வெள்ளநீர் வழிந்தோடிய போதிலும், அப்பகுதிகளில் பெருமளவிலான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், நகரின் மத்திய பகுதியூடாகப் பாயும் மகாவலியின் கிளை நதிகளுக்கு மிக அருகில் அமைந்துள்ள கட்டடங்கள் அடிக்கடி வெள்ளப் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன.

அக்குறணை நகரம் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்குவது தற்போது வழக்கமாகிவிட்டதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related posts

தனிப்பயன் இலக்கத் தகடுகள்

Lankasudar

ஆசிரியர் ஆட்சேர்ப்பில் குறைபாடு

Lankasudar

மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு

Lankasudar

ஞானசார தேரருக்கு ஆதரவு

Lankasudar

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: மூவர் கைது

Lankasudar

வெலிகமவில் போதைப்பொருள் மீட்பு

Lankasudar

Leave a Comment