November 6, 2026
இலங்கை

ஷிராந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்

பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள நவலோக தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய, அவரது உடல்நிலையைக் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

முன்னதாக, கைது செய்யப்பட்ட ஷிராந்தி ராஜபக்ஷ நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டபோது, திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தேசிய வைத்தியசாலையில் தற்காலிகமாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக நவலோக தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இன்றைய வானிலை

Lankasudar

நாமல் மீண்டும் விளக்கமறியலில்

Lankasudar

வீதி விபத்துகளில் இருவர் பலி

Lankasudar

கட்டுநாயக்கவில் இருவர் கைது

Lankasudar

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Lankasudar

பொதுமன்னிப்பு கோரிக்கை

Lankasudar

Leave a Comment