November 7, 2026
இலங்கை

ஊவா பரணகமவில் தாய் மாயம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் தொடர்ச்சியான கடும் மழை காரணமாக, நேற்று புதன்கிழமை (14) ஊவா பரணகம தேர்தல் தொகுதிக்குட்பட்ட கலஹகம பகுதியில் உள்ள சீதா ஆற்றைக் கடக்க முற்பட்ட 43 வயதுடைய பெண்ணொருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

தெல்ஹவாடிகம பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், கூலித் தொழிலாளி எனவும், மூன்று பிள்ளைகளின் தாயார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வேலைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, மேலும் ஐந்து பேருடன் இணைந்து குறித்த பெண் சீதா ஆற்றைக் கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன பெண்ணைத் தேடும் பணியில் பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பதுளை மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற வானிலை நிலவி வருவதுடன், கடந்த 24 மணித்தியாலங்களாகத் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியான மழை காரணமாக ஆறுகள் மற்றும் ஓடைகளின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால், அவற்றைக் கடக்கும்போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Related posts

மன்னாரில் சட்ட நடவடிக்கை

Lankasudar

வீதி விபத்துகளில் இருவர் பலி

Lankasudar

கொழும்பில் புதிதாக 122 மெட்ரோ பஸ்கள்: யாழ்ப்பாணம், கண்டி, காலி நகரங்களுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை

Lankasudar

ஆசிரியர் ஆட்சேர்ப்பில் குறைபாடு

Lankasudar

காணி வழங்குவதாகக் கூறி நிதி மோசடி: ஹட்டன் – டிக்கோயா நகர சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை

Lankasudar

அக்குறணையில் மீண்டும் வெள்ளம்

Lankasudar

Leave a Comment