November 6, 2026
இலங்கை

இடியுடன் மழை: கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், குருணாகல், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் வட மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும், காலி மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். மேலும், மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடல் பிராந்தியங்களுக்கும் எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். சிலாபம் முதல் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

இதன் காரணமாக, குறித்த கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காலி முதல் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலைகளின் உயரம் சுமார் 1.5 முதல் 2 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அத்தகைய வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வெப்பநிலையும் அதிகரிக்கும்

வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் வெப்பநிலை அதிகரித்து, மனித உடலால் அதிக வெப்பமாக உணரப்படக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கொழும்புத் துறைமுகத்திற்கு அமெரிக்க நிதியுதவி

Lankasudar

பொதுமன்னிப்பு கோரிக்கை

Lankasudar

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

Lankasudar

பலத்த மின்னல் எச்சரிக்கை

Lankasudar

காணி விடுவிப்பில் ஏமாற்றம்

Lankasudar

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 20 ஆண்டு கால EPF/ETF நிலுவைத்தொகை: ரூ. 4,500 மில்லியனை வழங்க நடவடிக்கை

Lankasudar

Leave a Comment