November 3, 2026
இலங்கை

நாமல் மீண்டும் விளக்கமறியலில்

கிரிஷ் (Krrish) நிறுவன விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அந்நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, நாமல் ராஜபக்ஷவுக்கான பிணை உத்தரவு இன்னும் தயாரிக்கப்படாததால், அது அடுத்த வழக்கு விசாரணையின்போது அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம குறிப்பிட்டுள்ளார்.

கிரிஷ் நிறுவனத்தின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய வகையில் 70 மில்லியன் ரூபாய் பணத்தை இலஞ்சமாக வழங்கியமை மற்றும் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

Related posts

மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு

Lankasudar

பேரினவாதத்தைத் தோற்கடிக்க ஒன்றிணைவு – ரிஷாட் பதியுதீன்

Lankasudar

அதிவேக நெடுஞ்சாலையில் ரூ.580 மில்லியன் பெறுமதியான பொருட்கள் திருட்டு

Lankasudar

ஞானசார தேரர் விவகாரம்

Lankasudar

ஜனாதிபதி செயலகத்தில் தேரர்கள் பேரணி

Lankasudar

GIT திருத்தங்களுக்கு அவகாசம் நீடிப்பு

Lankasudar

Leave a Comment