November 3, 2026
இலங்கை

ஞானசார தேரருக்கு ஆதரவு

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, மகா சங்கத்தினரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ‘காவி உடைக்கு நீதி – சுதந்திர பாதயாத்திரை’யில் பங்கேற்ற பிக்குகள் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வீதியில் அமர்ந்து தொடர்ந்தும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்டி தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள வாரியபொல சுமங்கல தேரரின் உருவச்சிலைக்கு முன்பாக ஒக்டோபர் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாதயாத்திரை, ஒக்டோபர் 15ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பை வந்தடைந்தது.

ஒக்டோபர் 15ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வந்தடைந்த மகா சங்கத்தினர் உள்ளிட்ட குழுவினர், ஞானசார தேரரை விடுதலை செய்வது தொடர்பில் அரசாங்கம் உறுதியான பதிலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேரர்களை ஜனாதிபதியின் செயலாளர் சந்தித்துக் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் செயலாளர் தலைமையிலான அதிகாரிகளிடம் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு மகா சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்தனர்.

எனினும், தமது கோரிக்கைகளுக்குத் தெளிவான பதில் கிடைக்காத நிலையில், பிக்குகள் அங்கிருந்து வெளியேறாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள பகுதியில் அதிகளவிலான பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

பிரகீத் வழக்கு ஒத்திவைப்பு

Lankasudar

சிகை நிலையங்களுக்கு கட்டுப்பாடு

Lankasudar

தெதுரு ஓயா வான்கதவுகள் திறப்பு 

Lankasudar

கண்டியில் மெட்ரோ பஸ் சோதனை

Lankasudar

ஏ.டி.எம். பணத் திருட்டு: உதவி கோரும் பொலிஸார்

Lankasudar

தங்கொட்டுவையில் பெண் கொ**லை

Lankasudar

Leave a Comment