November 8, 2026
இலங்கை

வருமான வரி அறிக்கை

வருமான வரிக்காகப் பதிவுசெய்துள்ள நபர்கள், 2025/2026ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த காலக்கெடுவிற்குள் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும் எனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2025/2026ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை இணையவழி (Online) முறையிலும் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது தொடர்பில் மேலதிக தகவல்கள் அல்லது தெளிவுபடுத்தல்கள் தேவைப்படின், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 1944 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ird.gov.lk ஊடாகவும் இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திரையரங்கில் ஆயுதங்கள் மீட்பு

Lankasudar

மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு

Lankasudar

நிலத்தடி நீர் பிரிவுக்கு அடிக்கல்

Lankasudar

இன்புளுவென்சா பரவல் அதிகரிப்பு

Lankasudar

இன்றைய வானிலை

Lankasudar

தனிப்பயன் இலக்கத் தகடுகள்

Lankasudar

Leave a Comment