November 8, 2026
இலங்கை

புத்தளத்தில் பீடி இலைகள் பறிமுதல்

புத்தளம், பெரியபாடு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சுமார் 125 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினரும் கடலோரக் பொலிஸ் படையினரும் இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை (16) கைப்பற்றியுள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் ‘தம்பபன்னி’ கடற்படைக் கப்பல் பிரிவினர், கடலோரக் பொலிஸ் படையினருடன் இணைந்து பெரியபாடு கடற்கரைப் பகுதியில் விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட மூன்று பொதிகளைச் சோதனையிட்டபோது, சுமார் 125 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

கடற்படையினரின் தீவிர நடமாட்டத்தைக் கவனித்த கடத்தல்காரர்கள், குறித்த பொதிகளைக் கைவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரித் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

4,000 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நிலுவை

Lankasudar

நாமல் மீண்டும் விளக்கமறியலில்

Lankasudar

மின்னல் தாக்கம் எச்சரிக்கை

Lankasudar

சீரற்ற வானிலை பாதிப்பு

Lankasudar

பஸ் மீது பாராங்கல் வீழ்ந்து விபத்து

Lankasudar

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: மூவர் கைது

Lankasudar

Leave a Comment