November 8, 2026
இலங்கை

நுவரெலியா தபால் நிலையம் புனரமைப்பு

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களில் ஒன்றான நுவரெலியா தபால் நிலையத்தைப் பாதுகாத்து, தேசிய மட்டத்திலான சுற்றுலாத்தலமாக மாற்றும் நோக்கில், அதன் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த கட்டடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தையும் இலங்கை தபால் சேவையின் அடையாளத்தையும் பாதுகாப்பதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதே இத்திட்டத்தின் நோக்கம் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த காலத்தில் சர்ச்சைகளுக்கு மத்தியில் பேசப்பட்ட இந்த வரலாற்றுக் கட்டடத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அதன் சுற்றுலா முக்கியத்துவத்தை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை நேரில் பார்வையிடும் நோக்கில், தபால் மா அதிபர் ருவான் சத்குமார அண்மையில் நுவரெலியா தபால் நிலைய வளாகத்திற்கு விஜயம் செய்தார்.

இதன்போது, பாதுகாப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை, தொல்பொருள் திணைக்களம் மற்றும் கட்டடங்கள் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

புனரமைப்புப் பணிகளின் தற்போதைய முன்னேற்றம், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பணிகளின் தரத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடல்களில் மத்திய மாகாண பிரதி தபால் மா அதிபர் அஸ்லம் ஹசன், நிர்வாகம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பதில் பிரதி தபால் மா அதிபர் சமீஷா டி சில்வா உள்ளிட்ட தபால் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் இலங்கை கடற்படையின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா தபால் நிலையத்தை எதிர்காலத் தலைமுறையினருக்காகப் பாதுகாப்பதுடன், இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு அதன் பங்களிப்பை மேலும் அதிகரிப்பதற்கும் திணைக்களம் உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தப் புனரமைப்புத் திட்டத்தின் மூலம் கட்டடத்தின் வரலாற்றுப் பெறுமதியைப் பாதுகாத்து, நுவரெலியாவுக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கான முக்கிய சுற்றுலா ஈர்ப்பிடமாக அதனை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தனிப்பயன் இலக்கத் தகடுகள்

Lankasudar

மாடு கடத்தல் முயற்சி

Lankasudar

காணாமல்போனோர் குடும்பங்களுக்கு எச்சரிக்கை

Lankasudar

ஹப்புத்தளையில் மண்சரிவு

Lankasudar

கொழும்பில் புதிதாக 122 மெட்ரோ பஸ்கள்: யாழ்ப்பாணம், கண்டி, காலி நகரங்களுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை

Lankasudar

மண்சரிவில் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

Lankasudar

Leave a Comment