November 7, 2026
இலங்கை

தமிழ் அமைப்புகளுக்கு பொது மன்னிப்பு

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில், புலம்பெயர் நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் ஆயுதம் தரித்த அனைத்து தமிழ் இயக்கங்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்த ஒப்பந்தத்தின் சரத்தின்படி தற்போதும் தடைசெய்யப்பட்டுள்ள சில தமிழ் மக்கள் மற்றும் அமைப்புகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இது தொடர்பாக இந்திய அரசும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான இலங்கை அரசும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஈரோஸ் கட்சியின் ஊடக மாநாடு மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் சனிக்கிழமை (17) நடைபெற்றது. இதன்போதே அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் போராட்டத்தின் விளைவாகவே வடக்கு, கிழக்கு உட்பட ஒன்பது மாகாணங்களுக்கான மாகாண சபை ஆட்சி முறைமை உருவானதாகத் தெரிவித்த அவர், அதற்காக தமிழ் மக்கள் உயிர்கள், சொத்துகள் உள்ளிட்ட பல்வேறு தியாகங்களைச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்போதும் புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் மீதான தடைகள் நீக்கப்படாததால், இலங்கைக்கு வரக்கூடிய கணிசமான பொருளாதார வளங்கள் தடுக்கப்படுவதாக இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார். குறிப்பாக, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி இதனால் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர் நாடுகளில் பலர் பல கோடி ரூபாய் பெறுமதியான முதலீடுகளை வைத்திருப்பதாகவும், அந்த முதலீடுகள் இலங்கைக்கு வருமானால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள நகரங்கள், கிராமங்களின் அபிவிருத்திக்கும் உதவியாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, இலங்கை மற்றும் இந்திய அரசுகள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீளாய்வு செய்வது காலத்தின் கட்டாயமாகும் எனக் குறிப்பிட்ட அவர், ஒப்பந்தத்தில் உள்ள சரத்தின்படி புலம்பெயர் நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த விடயத்தை இந்திய அரசும், தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான இலங்கை அரசும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் கோரிக்கை விடுத்தார்.

Related posts

திடீர் மின்வெட்டு: ஒரு மாதத்தில் விசாரணை அறிக்கை

Lankasudar

இலங்கையில் நாள்தோறும் 17 மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம்: மூவர் உயிரிழப்பதாக விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை

Lankasudar

ஹெரோயினுடன் அறுவர் கைது

Lankasudar

இன்றைய வானிலை

Lankasudar

வீதி விபத்துகளில் இருவர் பலி

Lankasudar

காணாமல்போனோர் குடும்பங்களுக்கு எச்சரிக்கை

Lankasudar

Leave a Comment