November 2, 2026
இலங்கை

தங்கொட்டுவையில் பெண் கொ**லை

தங்கொட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணவில பகுதியில் 65 வயதுடைய பெண்ணொருவர் கொ**லை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொ**லைச் சம்பவம் தொடர்பான தகவல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) தங்கொட்டுவை பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த பெண் தங்கொட்டுவை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது கழுத்துப் பகுதி கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டு கொ**லை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்வதற்காகத் தங்கொட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுங்கள்: சவுதியிடம் தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை

Lankasudar

பிரகீத் வழக்கு ஒத்திவைப்பு

Lankasudar

வவுனியாவில் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு

Lankasudar

மடு வீதி விபத்து: பெண் உயிரிழப்பு

Lankasudar

முன்னாள் அதிகாரி கைது

Lankasudar

ஊவா பரணகமவில் தாய் மாயம்

Lankasudar

Leave a Comment