November 8, 2026
இலங்கை

அஸ்வெசும மோசடி விசாரணை

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தாமாக முன்வந்து ஒப்புக்கொண்ட 14 ஊழியர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேச செயலகத்தின் அஸ்வெசும பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த இரண்டு அதிகாரிகளும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அந்த இரு அதிகாரிகளினால் பணம் வைப்புச் செய்யப்பட்டிருந்த மாவட்டச் செயலகத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஒருவரினதும், ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆறு ஆசிரியர்களினதும் பணிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி முறைகேடு தொடர்பாகக் கணக்காய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், அங்கு கடமையாற்றும் அபிவிருத்தி அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 14 ஊழியர்கள், 2023ஆம் ஆண்டு முதல் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தாமாக முன்வந்து ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பில் நோர்வுட் பிரதேச செயலாளர் நுவரெலியா மாவட்டச் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர் பொது நிர்வாக அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

நோர்வுட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ள அஸ்வெசும நிதி மோசடியின் பெறுமதி சுமார் 6 கோடி ரூபாயை நெருங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related posts

பலத்த மின்னல் எச்சரிக்கை

Lankasudar

எரிவாயு விநியோகம் மந்தம்

Lankasudar

அம்பாறையில் இருவர் கைது

Lankasudar

நுவரெலியா தபால் நிலையம் புனரமைப்பு

Lankasudar

புத்தளத்தில் பீடி இலைகள் பறிமுதல்

Lankasudar

வருமான வரி அறிக்கை

Lankasudar

Leave a Comment