November 2, 2026
இலங்கை

பலத்த மின்னல் எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருணாகல், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.

இன்று (18) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், நாளை (19) அதிகாலை 1 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு

Lankasudar

அலியேவுடன் விஜித்த ஹேரத் சந்திப்பு

Lankasudar

விதிமீறினால் புள்ளிகள் குறையும்; சாரதிகளுக்கு எச்சரிக்கை

Lankasudar

பேரினவாதத்தைத் தோற்கடிக்க ஒன்றிணைவு – ரிஷாட் பதியுதீன்

Lankasudar

காணி விடுவிப்பில் ஏமாற்றம்

Lankasudar

கஸ்ஸப தேரர் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றம்

Lankasudar

Leave a Comment