November 3, 2026
இலங்கை

இன்புளுவென்சா பரவல் அதிகரிப்பு

நாடு முழுவதும் இன்புளுவென்சா காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தொற்றுநோயியல் பிரிவின் சமூக மருத்துவ நிபுணரும் இன்புளுவென்சா தடுப்புப் பிரிவின் அதிகாரியுமான வைத்தியர் ஜீவதாரன் ஹம்சானந்தி, நாடளாவிய ரீதியில் உள்ள கண்காணிப்பு வைத்தியசாலைகள் ஊடாக இன்புளுவென்சா பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வாரந்தோறும் கண்டறியப்படும் தரவுகள் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இன்புளுவென்சா பரவல் அதிகரித்து வருவதால், தொற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டதைப் போன்ற தனிநபர் சுகாதாரம் மற்றும் சுவாச சுகாதாரப் பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து பேணுவதன் மூலம், காய்ச்சல் திடீரெனப் பெருமளவில் பரவுவதைத் தடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாசப் பாதை நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றவர்களுக்குத் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொவிட்-19 காலத்தைப் போன்று அனைவரும் முகக்கவசம் அணிவதற்குப் பதிலாக, நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இன்புளுவென்சா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ‘ஒசெல்டாமிவிர்’ (Oseltamivir) என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து, மருத்துவ விநியோகப் பிரிவு மற்றும் பிராந்திய மருத்துவ விநியோகப் பிரிவுகள் ஊடாக வைத்தியசாலைகளுக்குத் தாராளமாக விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஷிரந்தி ராஜபக்சவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்

Lankasudar

மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு

Lankasudar

மருந்து உற்பத்தி விரிவாக்கம்

Lankasudar

தனிப்பயன் இலக்கத் தகடுகள்

Lankasudar

டெங்கு தடுப்பூசி தாமதம்

Lankasudar

வவுனியாவில் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு

Lankasudar

Leave a Comment