18.1 C
London
October 1, 2026
இலங்கைவடக்கு

திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் பலவந்தமாக அகற்றினர்: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் – நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாகதீபம் திலீபனின் உருவச்சிலை பொலிஸாரால் அங்கிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் (26) நிறைவடைந்த நிலையில், இன்று (27) காலை பொலிஸாரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எந்தவிதமான முன்னறிவித்தலும் இன்றி வாகனங்களில் வருகை தந்த 15க்கும் மேற்பட்ட பொலிஸார், சப்பாத்துக் கால்களுடன் நினைவிட வளாகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த உருவச்சிலையை பலவந்தமாக எடுத்துச் சென்றுள்ளதாக செல்வராசா கஜேந்திரன் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

கொழும்பில் புதிதாக 122 மெட்ரோ பஸ்கள்: யாழ்ப்பாணம், கண்டி, காலி நகரங்களுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை

Lankasudar

அதிவேக நெடுஞ்சாலையில் ரூ.580 மில்லியன் பெறுமதியான பொருட்கள் திருட்டு

Lankasudar

யாழ். மானிப்பாயில் பொலிஸார் வழிமறித்தபோது திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு

Lankasudar

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 20 ஆண்டு கால EPF/ETF நிலுவைத்தொகை: ரூ. 4,500 மில்லியனை வழங்க நடவடிக்கை

Lankasudar

இலங்கையில் நாள்தோறும் 17 மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம்: மூவர் உயிரிழப்பதாக விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை

Lankasudar

ஐ.நா. பொதுச் சபையில் இன்று தேசிய உரையை நிகழ்த்தவுள்ளார் விஜித்த ஹேரத்

Lankasudar

Leave a Comment