November 7, 2026
இலங்கை

ஞானசார தேரருக்கான பேரணியில் தாக்குதல்? அம்பலமான பின்னணி.

பேரணியுடன் தொடர்பில்லை எனப் பொலிஸார் தெரிவிப்பு – சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் குற்றச்சாட்டு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் விடுதலையைக் கோரி, கண்டியிலிருந்து கொழும்பு வரை முன்னெடுக்கப்பட்ட பேரணிக்கு ஆதரவு தெரிவித்த நபர் ஒருவர் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பில் இலங்கை பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

குறித்த நபர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் பேரணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசலால் ஏற்பட்ட மோதல்

ஒக்டோபர் 14ஆம் திகதி வீரகுல பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற இச்சம்பவம், போக்குவரத்து நெரிசலின்போது ஏற்பட்ட தனிப்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின்படி, காயமடைந்த நபர் குறித்த பேரணியுடன் தொடர்புடையவர் அல்ல என்றும், தனிப்பட்ட காரணத்திற்காக லொறியில் பயணித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த நபரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின்படி, வீதியவத்தை தேவாலயத்திற்கு அருகில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின்போது, அவருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் பின்னர் முற்றிய நிலையில், தலைக்கவசத்தால் தாக்கும் அளவுக்கு வன்முறையாக மாறியுள்ளது. இதனையடுத்து, காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹொரனையில் புதிய ஆலை

Lankasudar

சீரற்ற காலநிலை பாதிப்பு

Lankasudar

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Lankasudar

மன்னாரில் சட்ட நடவடிக்கை

Lankasudar

மடு வீதி விபத்து: பெண் உயிரிழப்பு

Lankasudar

தெதுரு ஓயா வான்கதவுகள் திறப்பு 

Lankasudar

Leave a Comment