18.1 C
London
October 1, 2026
இலங்கைவடக்கு

வவுனியாவில் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  அத்துடன் அதே வீட்டில் மகனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இரு சடலங்களும் நேற்று (19) மாலை மீட்கப்பட்டுள்ளன என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 

வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் அவரது மகனும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், உறவினர்கள் இருவர் நேற்று மாலை வேளையில் அந்த வீட்டுக்குச் சென்றபோது, தாய் இரத்தக் காயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். 

உடனடியாக அவர் மீட்கப்பட்டு, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதேவேளை, அதே வீட்டின் மற்றொரு அறைக்குள் அவரது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Related posts

லண்டன் – யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை: பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் மனு

Lankasudar

மோட்டார் சைக்கிள் டயரில் சிக்கிய ஆடை: பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

Lankasudar

திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் பலவந்தமாக அகற்றினர்: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு

Lankasudar

மதுபானக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை: பொலிஸ் சார்ஜன்ட் உள்ளிட்ட இருவர் ஒரு மணித்தியாலத்துக்குள் கைது

Lankasudar

அதிவேக நெடுஞ்சாலையில் ரூ.580 மில்லியன் பெறுமதியான பொருட்கள் திருட்டு

Lankasudar

கொழும்பில் புதிதாக 122 மெட்ரோ பஸ்கள்: யாழ்ப்பாணம், கண்டி, காலி நகரங்களுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை

Lankasudar

Leave a Comment