18.1 C
London
October 1, 2026
இலங்கைமலையகம்

மண்சரிவில் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

மலையக மக்களுக்கு வீடு, காணி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

2023ஆம் ஆண்டு மண்சரிவில் வீடுகளை இழந்த பூனாகலை, கபரகலை பகுதிகளைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு “நவோதயாபுரம்” புதிய வீடுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்று (28) கையளிக்கப்பட்டன.

ஒவ்வொரு வீடும் 10 பேர்சஸ் காணியில் 550 சதுர அடி பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி சுமார் 32 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 4000 இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் 163 பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டன.

மலையக மக்களுக்கு வீடு, காணி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்துடன், எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்திலும் வீட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும், மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்காக பல்வேறு நிறுவனங்களின் அதிகாரங்களை ஒருங்கிணைத்து “மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை” ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்தார்.

Related posts

கொழும்பில் வயோதிபர்களுக்கான முதலாவது பகல்நேர செயற்பாட்டு மையம் ஆரம்பம்

Lankasudar

கொழும்பில் புதிதாக 122 மெட்ரோ பஸ்கள்: யாழ்ப்பாணம், கண்டி, காலி நகரங்களுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை

Lankasudar

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி சட்டத்தை மீறிய சுமார் இரண்டாயிரம் பேருக்கு அபராதம்

Lankasudar

மோட்டார் சைக்கிள் டயரில் சிக்கிய ஆடை: பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

Lankasudar

அதிவேக நெடுஞ்சாலையில் ரூ.580 மில்லியன் பெறுமதியான பொருட்கள் திருட்டு

Lankasudar

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 20 ஆண்டு கால EPF/ETF நிலுவைத்தொகை: ரூ. 4,500 மில்லியனை வழங்க நடவடிக்கை

Lankasudar

Leave a Comment