18.1 C
London
October 1, 2026
இந்தியா

“ஆறாத ரணம், தீராத வலி” – கரூர் துயரத்தை நினைவுகூர்ந்த முதல்வர் விஜய்

41 பேரின் உயிரைப் பறித்து, மாநிலத்தின் மீது நீங்காத உணர்வுப்பூர்வமான வடுவை ஏற்படுத்திய கடந்த ஆண்டு கரூர் நெரிசல் விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (27) அஞ்சலி செலுத்தினார்.

கடந்த தேர்தல் காலத்தில் கரூர் மாவட்டத்தில் விஜய் உரையாற்றிய முக்கிய அரசியல் பொதுக்கூட்டத்தின்போது, ​​2025 செப்டம்பர் 27 அன்று உயிரிழப்புகளை ஏற்படுத்திய நெரிசல் சம்பவம் நிகழ்ந்தது.

இது தமிழ்நாட்டின் அண்மைக்கால அரசியல் கூட்டங்களின் வரலாற்றிலேயே மிக மோசமான பாதுகாப்புத் தொடர்பான பேரிடர்களில் ஒன்றாக அமைந்தது.

அந்தத் துயரமான நிகழ்வின் முதலாம் ஆண்டை நினைவுகூரும் வகையில், ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்ட விஜய், அது ஒருபோதும் மறையாத வலி என்று குறிப்பிட்டுத் தனது ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தினார்.

அந்தப் பதிவில் அவர்,

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம். இதே நாள்.. அதாவது 2025 செப்டம்பர் 27. 

என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள். 

சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம்.

நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும். 

நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். 

நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி” என்று கூறியுள்ளார். 

விஜயின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கரூரில் தவெக சார்பில் இன்று முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

41 பேரின் நினைவாக வேலுச்சாமிபுரத்தில் நினைவு சின்னம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்வர் விஜயின் பரிசு அறிவிப்பு

Lankasudar

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கினார் முதலமைச்சர் விஜய்

Lankasudar

டிசம்பரில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி; ட்ரம்புடன் பேச்சுவார்த்தை?

Lankasudar

ஐ.நா. மேடையில் பாகிஸ்தானுக்கு மறைமுக பதிலடி கொடுத்த இந்தியா

Lankasudar

Leave a Comment