18.1 C
London
October 1, 2026
இலங்கைகொழும்பு

கொழும்பில் வயோதிபர்களுக்கான முதலாவது பகல்நேர செயற்பாட்டு மையம் ஆரம்பம்

கொழும்பில் வாழும் வயோதிபர்களுக்கான உடல் மற்றும் உள நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் முதலாவது பகல்நேர செயற்பாட்டு மையத்தை கொழும்பு மாநகர சபை, கிருலப்பனையில் ஆரம்பித்துள்ளது.

கொழும்பு மாநகரில் வாழும் வயோதிபர்களுக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான பிரத்தியேக வசதிகளை வழங்கும் நோக்கில், நகரின் முதலாவது முதியோர் பகல்நேர செயற்பாட்டு மையத்தை, கொழும்பு மாநகர சபை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளது.

இந்த நிலையம் கிருலப்பனை, நாகஸ்வத்த சிறுவர் சமூக மைய வளாகத்தில் நேற்று (29) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நகரப் பகுதிகளில் வசிக்கும் வயதான பிரஜைகளின் உடல், உள மற்றும் சமூக நல்வாழ்வை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு யோகா பயிற்சிகள், பொழுதுபோக்கு விளையாட்டுகள், அறிவாற்றல் சார் செயற்பாடுகள், இசை மற்றும் நடனம் உள்ளிட்ட பல்வேறு விசேட அம்சங்கள் இந்த மையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தத் திட்டம் ஆரம்ப கட்டமாக நாகஸ்வத்த பகுதியைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட வயோதிப குழுவை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்மூலம் அவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும், மற்றவர்களுடன் கலந்துரையாடி, தமது சமூகத்துக்குள் சிறந்த பிணைப்புகளை கட்டியெழுப்புவதற்கும் தேவையான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கொழும்பு மாநகர மேயர் விராய் கேலி பல்தசார், நகரின் வயதான சனத்தொகையைப் பராமரிக்கும் பொறுப்பு மாநகர சபைக்கு உண்டு என்று தெரிவித்தார். நீங்கள் அனைவரும் கடினமான வாழ்க்கைப் பாதையைக் கடந்து வந்துள்ளீர்கள் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம் எனவும், நீங்கள் தனிமையில் இல்லை என்பதை உங்களுக்கு உணர்த்துவதோடு, உங்களைப் பராமரித்து அமைதியை வழங்குவதே சபையின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பின் ஏனைய பகுதிகளுக்கும் இந்த முதியோர் பகல்நேர செயற்பாட்டு மையத் திட்டத்தை விரிவுபடுத்த கொழும்பு மாநகர சபை திட்டமிட்டுள்ளதுடன், இதன்மூலம் நகரின் மேலும் பல சிரேஷ்ட பிரஜைகள் இவ்வாறான சமூகம் சார்ந்த நலன்புரி சேவைகளை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும்.

Related posts

வவுனியாவில் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு

Lankasudar

ஏரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! ரி-56 துப்பாக்கியுடன் 84 தோட்டாக்கள் மீட்பு

Lankasudar

கொழும்பில் புதிதாக 122 மெட்ரோ பஸ்கள்: யாழ்ப்பாணம், கண்டி, காலி நகரங்களுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை

Lankasudar

கலஹாவில் புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு

Lankasudar

இலங்கை மற்றொரு பிரஜையை இழந்துவிடக் கூடாது: சவூதி மரண தண்டனை விவகாரத்தில் பைஸர் முஸ்தபா அவசர அழைப்பு

Lankasudar

ஐ.நா. பொதுச் சபையில் இன்று தேசிய உரையை நிகழ்த்தவுள்ளார் விஜித்த ஹேரத்

Lankasudar

Leave a Comment