November 6, 2026
இலங்கை

வீதி விபத்துகளில் இருவர் பலி

மிரிகான மற்றும் கற்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் நேற்று வியாழக்கிழமை (15) இடம்பெற்ற இருவேறு வீதி விபத்துகளில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிரிகான – நாவல வீதி விபத்து

மிரிகான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவல வீதியில், நாவல சந்தியிலிருந்து மிரிகானை நோக்கிப் பயணித்த ஜீப் வண்டியொன்று திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் பெண் ஒருவர் வீதியைக் கடப்பதற்காகக் காத்திருந்தபோது நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, பின்னால் வந்த கெப் ரக வாகனமொன்று குறித்த ஜீப் வண்டியின் பின்புறத்தில் மோதியுள்ளது. இந்த மோதலின் தாக்கத்தினால் ஜீப் வண்டி முன்னோக்கி நகர்ந்து, வீதியைக் கடக்க முயன்ற பெண் மீது மோதியுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த பல்லேவெல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பெண், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய ஜீப் மற்றும் கெப் ரக வாகனங்களின் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலாவி – கற்பிட்டி வீதி விபத்து

கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலாவி – கற்பிட்டி வீதியின் கந்தக்குடாவ பகுதியில், கற்பிட்டி நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியின் இடதுபுறமாகச் சென்றுகொண்டிருந்த பாதசாரி மீது மோதியுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த தலவில பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர், கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய வேன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரு வீதி விபத்துகள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

கலஹாவில் புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு

Lankasudar

நாமல் நீதிமன்றில்

Lankasudar

ஐஸ் போதைப்பொருளுடன் முரவத்தே சீப்பு கைது

Lankasudar

புத்தளத்தில் பீடி இலைகள் பறிமுதல்

Lankasudar

காணாமல்போனோர் குடும்பங்களுக்கு எச்சரிக்கை

Lankasudar

ஞானசார தேரருக்கான பேரணியில் தாக்குதல்? அம்பலமான பின்னணி.

Lankasudar

Leave a Comment