November 6, 2026
இலங்கை

மின்தடைக்கான காரணம் தெரியவில்லை

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மின்தடைக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகத்தைப் படிப்படியாக மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (16) கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறும், மின்தடைக்கான சாத்தியமான காரணிகளில் ஒன்றாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஏற்கனவே ஒரு பகுதியில் மின்சார விநியோகம் மீள வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பகுதிகளுக்கும் கட்டம் கட்டமாக மின்சாரம் வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய மின் கட்டமைப்பைச் சீரமைக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், மறு அறிவித்தல் வரை தங்களது கூரை சூரிய மின்கலக் கட்டமைப்புகளை நிறுத்தி வைக்குமாறு அதன் உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மின்தடைக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் கூடிய விரைவில் மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதே தற்போதைய முதன்மையான இலக்கு என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

நாமல் நீதிமன்றில்

Lankasudar

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு உறுதி

Lankasudar

ஹொரனையில் புதிய ஆலை

Lankasudar

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுங்கள்: சவுதியிடம் தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை

Lankasudar

பஸ் மீது பாராங்கல் வீழ்ந்து விபத்து

Lankasudar

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: மூவர் கைது

Lankasudar

Leave a Comment