November 6, 2026
இலங்கை

மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் வேய் ஹுவாஷியாங், கடந்த வெள்ளிக்கிழமை (16) கண்டிக்கு விஜயம் செய்து, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் ஆகியோரைச் சந்தித்தார்.

இதன்போது, சீனா – இலங்கை பௌத்த கலாசாரப் பரிமாற்றங்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் மட்டத்திலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இரு தரப்பினரும் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

பௌத்த பாரம்பரியம் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்கள் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்புகளில், இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் கலாசார மற்றும் கல்வி விவகாரங்களுக்கான ஆலோசகர் ஜி லிலியும் கலந்துகொண்டார்.

Related posts

காணி வழங்குவதாகக் கூறி நிதி மோசடி: ஹட்டன் – டிக்கோயா நகர சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை

Lankasudar

கொழும்புத் துறைமுகத்திற்கு அமெரிக்க நிதியுதவி

Lankasudar

எரிவாயுக் கப்பல் இன்று வருகை

Lankasudar

பஸ் மீது பாராங்கல் வீழ்ந்து விபத்து

Lankasudar

இலங்கையில் நாள்தோறும் 17 மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம்: மூவர் உயிரிழப்பதாக விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை

Lankasudar

ஞானசார தேரர் விவகாரம்

Lankasudar

Leave a Comment