November 6, 2026
உலகம்

பிரான்ஸில் 1,200 பேர் கைது

பிரான்ஸில் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களுக்கு எதிராக சனிக்கிழமை (17) முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டங்கள், நாட்டின் பல பகுதிகளில் வன்முறையாக மாறியுள்ளன.

பிரான்ஸ் முழுவதும் சுமார் ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சுமார் 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 150 பொலிஸார் மற்றும் ஜெண்டர்ம்கள் காயமடைந்துள்ளதாகப் பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார்.

தலைநகர் பாரிஸில் மாலை வேளையில் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் உள்ளிட்ட கலகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். பல நகரங்களில் கடைகள் சூறையாடப்பட்டதுடன், கட்டடங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன.

லிமோஜஸ் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபம் தீக்கிரையானதுடன், அதன் பெரும்பகுதி தீயினால் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லியோன் நகரில் உள்ள சுற்றுலா அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மேலும், மார்செய், லில் மற்றும் அங்கர்ஸ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள சில நகராட்சி கட்டடங்களிலும் அத்துமீறல்கள் மற்றும் சேதப்படுத்தும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

செயின்ட்-எட்டியன் நகரில் இடம்பெற்ற மோதலின்போது, 17 வயதுடைய போராட்டக்காரர் ஒருவரின் கை பலத்த காயமடைந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பிரான்ஸின் தேசிய பொலிஸ் கண்காணிப்பு அமைப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. காயம் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் பொதுச் சேவைகள் தொடர்பான அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தப் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. போராட்டங்களில் பெரும்பாலானோர் அமைதியான முறையில் பங்கேற்ற போதிலும், சில பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைகளால் பரவலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

Related posts

தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு: 27 பேர் உயிரிழப்பு

Lankasudar

கலிபோர்னியாவில் காட்டுத்தீ தீவிரம்

Lankasudar

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு திட்டமில்லை – ஈரான் தெரிவிப்பு

Lankasudar

விமானப்படைத் தளத்தை குறிவைத்த சதி? – ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

Lankasudar

இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் அருகே பரபரப்பு

Lankasudar

கொல்கத்தாவில் நெரிசல்: 17 பேர் பலி

Lankasudar

Leave a Comment