November 6, 2026
இலங்கை

பசிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிரான விசாரணைகள் தொடர்பான வழக்குக் கோவைகள் மற்றும் ஆவணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்‌ஷவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், நிலுவையில் உள்ள விசாரணைகள் தொடர்பில் சர்வதேச கைது பிடியாணையைப் பெறுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், பசில் ராஜபக்‌ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன், பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவித்தலைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு நீதிவான் கட்டளையிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கருத்துக்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

4,000 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நிலுவை

Lankasudar

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

Lankasudar

திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் பலவந்தமாக அகற்றினர்: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு

Lankasudar

தங்கொட்டுவையில் பெண் கொ**லை

Lankasudar

காணி வழங்குவதாகக் கூறி நிதி மோசடி: ஹட்டன் – டிக்கோயா நகர சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை

Lankasudar

தெதுரு ஓயா வான்கதவுகள் திறப்பு 

Lankasudar

Leave a Comment