November 6, 2026
இலங்கை

ஞானசாரர் போராட்டம்: மூவருக்கு பிணை

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட மூவரையும் பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரையும் கோட்டை பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர் ஒருவருக்கு எதிராகக் குற்றவியல் ரீதியில் பலவந்தத்தைப் பிரயோகித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நபரை, தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

அதேவேளை, உரிய அனுமதிப்பத்திரமின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஏனைய இருவரும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

இன்புளுவென்சா பரவல் அதிகரிப்பு

Lankasudar

GIT திருத்தங்களுக்கு அவகாசம் நீடிப்பு

Lankasudar

தனிப்பயன் இலக்கத் தகடுகள்

Lankasudar

பலத்த மின்னல் எச்சரிக்கை

Lankasudar

தங்கொட்டுவையில் பெண் கொ**லை

Lankasudar

சீரற்ற காலநிலை பாதிப்பு

Lankasudar

Leave a Comment