தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரபகெம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 78 கிலோகிராம் 35 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனமல்வில பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று வியாழக்கிழமை (15) இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஹம்பகமுவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே குறித்த கஞ்சா தொகையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை (16) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
