November 6, 2026
இலங்கை

உத்தியோகத்தரைத் தாக்கியவர் கைது

மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவை, கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்டப் பகுதியில் உதவி வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (15) குறித்த தோட்டப் பகுதியில் பெண் தொழிலாளர்கள் தேயிலைக் கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு கடமையில் இருந்த உதவி வெளிக்கள உத்தியோகத்தரைச் சந்தேகநபர் கடுமையாகத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, அவர் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, தோட்ட உத்தியோகத்தர்கள் அனைவரும் இன்று ஒன்றிணைந்து தோட்டத் தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, சந்தேகநபர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் வைத்து இன்று கைது செய்யப்பட்டதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான உதவி வெளிக்கள உத்தியோகத்தர் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

GIT திருத்தங்களுக்கு அவகாசம் நீடிப்பு

Lankasudar

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு உறுதி

Lankasudar

பொதுமன்னிப்பு கோரிக்கை

Lankasudar

ஞானசார தேரர் விவகாரம்

Lankasudar

அஸ்வெசும மோசடி விசாரணை

Lankasudar

மன்னார் வைத்தியசாலையில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல்

Lankasudar

Leave a Comment