November 6, 2026
இலங்கை

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (18) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், புத்தளம், மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். சிலாபம் முதல் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அடிக்கடி மணித்தியாலத்திற்கு 45 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இதனால், குறித்த கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, காலி முதல் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலைகள் 1.5 முதல் 2.0 மீற்றர் உயரம் வரை எழக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அத்தகைய நேரங்களில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எனவே, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் உள்ளிட்ட கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வானிலை நிலைமைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

தனிப்பயன் இலக்கத் தகடுகள்

Lankasudar

வீதி விபத்துகளில் இருவர் பலி

Lankasudar

யாழ். பழைய பூங்கா விளையாட்டரங்கு விவகாரம்: மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஆளுங்கட்சிக்குள் மோதல்

Lankasudar

இனவாதம் இன்னமும் ஒழிக்கப்படவில்லை – லால்காந்த

Lankasudar

சிகை நிலையங்களுக்கு கட்டுப்பாடு

Lankasudar

ஹொரனையில் புதிய ஆலை

Lankasudar

Leave a Comment